அன்புள்ள அம்மா,
இக்கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தெரிய வில்லை. கடிதம் ஏன் என்று நீங்கள் கேட்கலாம் . சிறு காலாமாக, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் Jillu பிறந்ததிலேருந்து பல விதமான யோசனைகள் வந்து உள்ளது.
காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அவளை நன்றாக வளர்க்க வேண்டும், உறவு, பாசம்,உண்மை, இவற்றுக்கு மரியாதை கொடுக்கும் படி செய்ய வேண்டும். தீமைக்கு துணை புரியாமல் இருக்க வேண்டும். இவ்வாறு பல யோசனைகள் ஏன் மனதில் ஓடுகிறது.
நீங்களும் இதையே தான் நினைத்துக்கொண்டு உங்கள் பிள்ளைகளை வளர்திருப்பீர்கள். இன்னும் 25 ஆண்டுகளுக்கு பிறகு Jillu என்னையும் உங்கள் பிள்ளையையும் போல (தூக்கத்திலும் சொம்பெரிதனதிலும் இல்லை :) ) வந்தால் நான் மிகவும் சந்தோஷ படுவேன்.
எங்கள் இந்த நல்ல நிலைக்கு காரணம் எங்கள் பெற்றோர்கள் தானே. அதற்குத்தான் நன்றி. நன்றி என்று சொல்வதை விட நான் இதை உணர்கிறேன் என்று சொல்வது தான் உசிதம். பிற்காலத்தில் ஜில்லு வும் இப்படியே நினைக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அப்பொழுது தான் நான் நினைப்பதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தோன்றியது.
நான் உங்களுக்கு மருமகளாக வந்ததிற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.இந்த காலத்தில் நான் என்னென்னவோ கேள்வி படுகிறேன், நேராகவும் பார்த்திருக்கிறேன். அப்படி எல்லாம் இல்லாமல் நீங்கள் என்னை உங்கள் மகளாகவே நினைக்கிறீர்கள்.இதெல்லாம் வெறும் வாய் வார்த்தைக்காக சொல்ல வில்லை. ஏன் மனதார சொல்கிறேன். இன்னும் சொல்ல போனால், நீங்கள் எங்களுடன் இருந்து நான் உங்களுக்கு உதவ முடிய வில்லையே என்று எனக்கு கஷ்டமாக உள்ளது. இதையெல்லாம் எனக்கு நேரே ஒழுங்காக சொல்ல வராது. எனவே தான் இந்த கடிதம்.
நாளை என்ன நடக்கும் என்று நம் யாருக்கும் தெரியாது. எனவே இப்போதிய பொழுதை ரசிக்க வேண்டும். வாழும் காலங்களில் நன்றாக, மகிழ்வோடு மனம் திறந்து பேசி வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். காலம் தாண்டி உணர்ந்து என்ன பயன்? இல்லையேல் உணர்ந்தும் சொல்லாமல் இருப்பதில் என்ன பயன்? எனவே தான் ஏன் அம்மா அப்பா விற்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். இது உங்களுக்கு.
இப்படிக்கு
லாவண்யா
P.S : Copy of handwritten letter to my MIL